2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு

Thipaan   / 2016 ஜூன் 16 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை-மட்டக்களப்பு ஏ-15 நெடுஞ்சாலையை இடைமறித்து, கதிரவெளி கனிஸ்ட வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும், இன்று (16) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையால், பிரதான வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பாதிக்கப்பட்டது.

தமது பாடசாலையில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நிவரத்திக்குமாறு கோரி, காலை 7.30க்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், காலை 9.30 மணியளவில் நிறைவடைந்தது.

இந்நெடுஞ்சாலையினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ஸ்தலத்துக்கு வந்த வாகரைப் பொலிஸார் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X