2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆலயத்தில் பணம், நகைகள் திருட்டு

Thipaan   / 2016 ஜூன் 13 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில், திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றதாக, ஆலய நிர்வாகத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மூலஸ்தானம் மற்றும் உண்டியலில் இருந்த 77ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தினால் சேதமடைந்த இந்த ஆலயம், புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவரும் நிலையில், மூலஸ்தானம் மட்டும் காணப்படுகிறது. அதிலிருந்த நகைகள் மற்றும் உண்டியலிலிருந்த பணம் என்பனவே திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், அப்பகுதியில் இரண்டு பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X