2024 ஜூலை 27, சனிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகருடன் கிழக்கு ஆளுநர் விரிவான கலந்துரையாடல்

Freelancer   / 2023 மே 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  விரிவான கலந்துரையாடலை நேற்று (25) மேற்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய இந்திய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிழக்கில் உள்ள இந்திய நிறுவனங்கள், தனது நலன்புரிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை கிழக்கில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு வழங்க இந்திய தூதரம்  உதவி செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும் Alliance air சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு விமான நிலையங்களுக்கு நீடிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் போன்று கிழக்கிலும் ரயில் பாதையை மேம்படுத்துவதற்கும் கோரிக்கை  விடுக்கப்பட்டது.

கிழக்கில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .