Editorial / 2019 மே 16 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலையில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி இளைஞர்கள் பயணித்த ஒட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை- பூம்புகார் வீதியைச் சேர்ந்த சபீக் மொஹொமட் (24 வயது), பாலையூற்றைச் சேர்ந்த மொஹொமட் முஸ்தபா (25 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த பாலரூபன் டிலக்சன் (20 வயது) ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரும், திருகோணமலை மட்கோ மொஹொமட் நகரிலுள்ள அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மதில்மீதேறி உள்நுழைந்து, பாடசாலை கலைக்கூடத்தை உடைத்து, அதன் அருகிலுள்ள காட்போட் மட்டைகளை ஒன்று சேர்த்து பாடசாலைக்குத் தீ வைக்க முயற்சித்துள்ளனர் என்றும், இனங்களுக்கிடையே இன மோதல்களை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .