Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 26 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
'இந்த நாட்டைப் பீடித்துக்கொண்டிருக்கும் பாரிய வியாதியாக இன மேலாதிக்கவாதமும் மத மேலாதிக்கவாதமும் காணப்படுகின்றன. இவையே, இந்த நாட்டினுடைய பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன எனக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இந்த மேலாதிக்கங்கள் அழிவடையும்போதே, இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை நடைபெற்ற 'அல்லறுப்போம்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மத மேலாதிக்கவாதம், இன மேலாதிக்கவாதம் ஆகியவை காரணமாக இந்த நாடு பாரிய பிரச்சினைகளை கடந்த காலத்தில் எதிர்நோக்கியது. ஆனால், தற்போதும் கூட இந்த நிலைமையே காணப்படுகின்றது.
இந்த மேலாதிக்கவாதங்கள் இந்த நாட்டில் இருக்கும்வரை எமது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்பதுடன், இழுத்தடிக்கப்படும் நிலைமையே காணப்படும்' என்றார்.
'அல்லறுப்போம் எனும் நூலில் கூட சம்பூர் மக்களின் பிரச்சினைகள், மீனவர்களின் பிரச்சினைகள், குடிநீர்ப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை எனப் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நாட்டில் நீதி, உண்மை என்பன நிலைநாட்டப்படும்போதே, நல்லாட்சி நிலவும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago