2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

’இயற்கை வளத்தை அதிகரிப்போம்’

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

"இயற்கை வளத்தை அதிகரிப்போம்"எனும் தொனிப்பொருளில், திருகோணமலை சிறைச்சாலை புனர்வாழ்வு பகுதியின் ஏற்பாட்டில்,  125 மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் இன்று (08)  நடைபெற்றது.

இதன்போது கப்பல் துறையில் அமைந்துள்ள சிறைச்சாலைக்குரிய காணியில் 125 மரக்கன்றுகள் நட்டி வைக்கப்பட்டன.

இதில் மகோகனி, தேசி, நாகமரம் மற்றும் சமுளை போன்ற மர வகைகள் நட்டி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப், பிரதான ஜெயிலர் சம்பத் ஜெயவர்தன, புனர்வாழ்வு அதிகாரி எப்.முபாரக், பி.சுசிதரன், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சி.டி.பாஸ்கரன், உப தலைவர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X