2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரவு 7 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி மறுப்பு

வடமலை ராஜ்குமார்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடரபாக, பெற்றோர்களாலும் சமூக நலன் விரும்பிகளாலும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில், நகராட்சி மன்ற  விசேட அமர்வின் போது, இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரவு வேளைகளில், மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் போது, சில பிழையான வழிகளுக்கு அவர்கள் செல்லும் சந்தர்ப்பங்கள் உள்ளனவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, நகராட்சி மன்றப் பகுதிக்குள் நடைபெறும் இரவு நேர வகுப்புகளை, ஏனைய உள்ளூராட்சி சபைகளில் நிறுத்தியது போல இங்கும் நிறுத்தப்பட வேண்டுமென, திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற விசேட சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து, பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் சகல ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X