2025 மே 03, சனிக்கிழமை

இரும்புப் பெட்டியால் பஸ் நிலையத்தில் பதற்றம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்புப் பெட்டியொன்று இருந்தமையால், இன்று (05) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பஸ்கள் தரித்து நிற்கும் இடத்துக்கு அருகில் குறித்த பெட்டியானது நேற்றுக் காலை முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனை அடுத்து அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பலத்த பாதுகாப்புடன் அப் பெட்டியைத் திறந்து பார்த்தனர்.

அந்த இரும்புப் பெட்டி, இராணுவ வீரர் ஒருவருடைய உடைமை என அடையாளம் காணப்பட்டதையடுத்து பதற்றம் தனிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X