2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இருவருக்கிடையில் கைகலப்பு:வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை- உப்புவெளி பிரிவுக்குட்பட்ட நித்தியபுரி பகுதியில் நேற்று  மாலை இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஒருவர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்தாக   உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

  வெட்டுக் காயங்களுக்கு உள்ளானவர் திருகோணமலை-செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கே. ஆனந்த பிரசாத் ( 40 வயது) எனவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் குறித்து விவரிக்கையில், மேசன் வேலை செய்யும் இவர்கள் தனிப்பட்ட தகராறு காரணமாகவே கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது  ஏற்பட்ட  முரண்பாட்டையடுத்து,  ஒருவர் மற்றவருக்கு  கத்தியால் வெட்டியதாகவும் இச்சம்பவத்தின்போது, கை மற்றும் வயிற்று பகுதில்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .