Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அச்சுருவாக்கப்பட்ட திருகோணமலை எழுத்தாளர்களின் நூல்களின் கையளிப்பும் வெளியீட்டு நிகழ்வும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச. நவநீதன் தலைமையில், திருகோணமலை நகரசபை மண்டபத்தில், எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
சூசை எட்வேட் எழுதிய “இங்கு வீசியது ஒரு சமாதானக் காற்று” என்ற சிறுகதைத் தொகுப்பும், செல்வி பரமேஸ்வரி அருணாசலம் எமுதிய “கூடிவாழ் சிறுவர் கதைகள்” என்ற நூல்களே வெளியீடப்படவுள்ளன.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக தொழிற்றுறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமாரும் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.எம்.முஸ்ஸிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்படி நூல்களின் சிறப்பாய்வுரையை மூத்த எமுத்தாளர் திருமலை நவம் வழங்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .