2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இரு யானைகளின் உடலங்கள் மீட்பு

Editorial   / 2021 நவம்பர் 11 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ உல்பெத்வெவ பகுதியில் இறந்த நிலையில் இரு யானைகளின் உடலங்கள், இன்று (11) மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரு ஆண் யானைகளின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவ் யானைகளின் உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மின்சார யானை வேலியில் சிக்குண்டு யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 சம்பவ இடத்துக்கு வின விலங்கு ஜீவராசி திணைக்களத்தினர் வருகை தந்துள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X