Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன், பொன்ஆனந்தம்
திருகோணமலை மின்சார நிலைய வீதியிலுள்ள நகரசபைக்குச் சொந்தமான சந்தை (இதுவரை திறக்கப்படாத) அமைந்துள்ள பகுதியை, இலங்கை இராணுவத்தின் 221ஆவது படை பிரிவு கஜபா படையணியின் லெப்டினென்ட் மனோரா ஜயதிலக, நகர சபை அதிகாரிகளிடம், செவ்வாய்க்கிழமை (16) கையளித்தார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சந்தைக் கட்டடம், நகர சபை அதிகாரிகளால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.
1997ஆம் ஆண்டு காலப்பகுதியில், அப்போதைய நகர சபைத் தலைவராக இருந்த பெரியபோடி சூரியமூர்த்தியினால், 65 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த இக்கட்டடத்தை, 2000ஆம் ஆண்டு திறக்க முற்பட்ட போது மாவட்டத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை எழுந்திருந்தது.
இராணுவத்தினர் தலையிட்டு இதனை திறக்க விடாது செய்தமையால், பல வருடங்களாகத் திறக்கப்படாமல் இருந்த இக்கட்டடம், பின்னர், யாழ்ப்பாணத்துக்குக் கப்பல் மூலம் செல்லும் பயணிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
2005ஆம் ஆண்டு, இச்சந்தை தொகுதியைக் கையகப்படுத்திய கடற்படையினர், 2010ஆம் ஆண்டுவரை, அங்கு முகாம் அமைத்து இருந்தனர். பின்னர், இலங்கை இராணுவத்தினர் அதனை தமது முகாமாக பயன்படுத்தி வந்தனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றும் நடவடிக்கையின் பலனாக, இக்கட்டடத்தை விடுவிப்பதாக நகர சபையினருக்கு கடிதம் மூலம் இராணுவத்தினர் அறிவித்தல் வழங்கி இருந்தனர்.
அதற்கு அமைவாக இரண்டு தினங்களாக அங்கிருந்த உடமைகள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago