2025 மே 17, சனிக்கிழமை

இராணுவ வாகனம் மோதி இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, ரங்கிரிவுல்பொத்த சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் இராணுவத்துக்குச் சொந்தமான வாகனம், இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் 12.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை-துலசிபுரம் இலக்கம் 16 இல் வசித்து வரும் டபிள்யூ.சஜித் மதுசங்க எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவருடன், இராணுவ வாகனம் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளானவரை, கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக, கோமரங்கடவெலப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .