2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இறால் பாலம் புனரமைக்கப்படுமா?

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்   

  மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள  மூதூர் கட்டபறிச்சான் களப்பு ஆற்றுக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள    இறால் பாலத்தினுடாக பயணிப்பது மிகவும் ஆபத்தாகவுள்ளதால்   இதனை புனரமைப்புச் செய்துதருமாறு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கட்டபறிச்சான் இறால் பாலத்தினை கடந்தே பள்ளிக்குடியிருப்பு, கட்டபறிச்சான், சேனையூர், சம்பூர், மூதூர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு   பொது மக்கள்  பாடசாலை மாணவர்கள்எனப் அதிகமானோர்  பயணம் செய்கின்றனர்.எனவே, இந்த இறால் பாலமானது, களப்பு ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளதால்,   நில மட்டத்துடன்  பதிந்து  கீழ் இறங்கி  காணப்படுவதுடன் பாலத்தின் இருமருங்கிலும்  பாதுகாப்புக்காக போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு கம்பிகளும் வேலிகளும்  அழிந்துபோயுள்ளன.  மாரி காலத்தில் இப்பாலத்தினை மூடிவிடும் அளவுக்கு வெள்ளம்  அடித்துக்கொண்டு,  செல்வதால் மக்கள் வீதியை கடந்து செல்லமுடியாது அவதியுறுகின்றனர்.இதனால்  மக்கள் ஆற்றுக்குள் உள்ளே விழுந்து  ஆபத்தான நிலை ஏற்படலாமெனத் தெரிவிக்கப்படும் இதேவேளை,சில சமயங்கள் மக்கள் ஆற்றுக்குள்  தவறி  விழுந்து விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகவும்  கூறுகின்றனர்.கடும்   வெள்ளமான காலத்தில்   போக்குவரத்து துண்டிப்பும் ஏற்படுகின்ற இதேவேளை, படகு மூலம் மக்கள் இறால் பாலத்தை கடந்து செல்லும் அவல நிலையும் எழுவதுண்டு.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X