2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 16 மாடுகள் மீட்பு

Princiya Dixci   / 2021 நவம்பர் 01 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X