Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய இன்று அதிகாலை 3 மணியளவில் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு ஒன்று பிரயாணித்த போது அதனை கடற்படையினர் சுற்றிவழைத்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் ஒரு பெண் உட்பட 20 பேர் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்துள்ளமை கண்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை கடற்பட முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், இவர்கள் களுவாஞ்சிக்குடி நாகர்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை விசாரணையின் பின்னர் திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago