Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி திங்கள் (27) முதல் இரு பஸ் சேவைகளை அல் ஹிக்மத்துல் உம்மா பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இப் பஸ் சேவை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸ்ஹர்கான் தலைமையில், அல்ஹிக்மத்துல் உம்மா பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளரும், சமூக சேவையாளருமான கஸ்ஸாலி முகமட் பாத்திஹ்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதலாவது பஸ் சேவையானது கிண்ணியாவின் கிராமப்புறமான நடுவூற்று ஊடாக வான்எல வரை செல்கிறது.
இரண்டாவது பஸ் சேவையானது முள்ளிப்பொத்தானை வரை செல்கிறது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இச்சேவை ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago