Princiya Dixci / 2016 மே 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சேருவிலப் பிரதேசத்தில் பெண்ணொருவரைக் காதலித்து கூட்டிச் சென்ற சந்தேகநபரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று புதன்கிழமை (04)உத்தரவிட்டார்.
சேருநுவர, எல்.பி.இரண்டு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், அப்பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவரைக் காதலித்து அப்பெண்ணிண் பெற்றோருக்குத் தெரியாமல் கூட்டிச் சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் பெற்றோர்களினால் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரை, செவ்வாய்க்கிழமை (03) பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
09 May 2026