அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 11 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பாலத்துக்குக் கீழ், நேற்று (10) தூண்டலின் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர், காணாமல் போயிருந்த நிலையில், இன்று (11) மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டாரென, கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா 3, பிரதான வீதியைச் சேர்ந்த யாக்கூப்ஹாரி முஹீத் (18வயது) என்ற இனைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞன், கிண்ணியா பாலத்துக் கீழே உள்ள தூணில் இருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தவறுதலாக கடலில் விழுந்துள்ளார்.
இவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் இரு நாள்களாக ஈடுபட்டிருந்த நிலையில், தோனா பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலத்தை இன்று கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யவுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
17 Mar 2026
17 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Mar 2026
17 Mar 2026