Editorial / 2018 நவம்பர் 18 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குப் பயணிகளை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபையின் கிண்ணியா டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, கல்லோயா - அக்கோபுரவுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து கட்டாக்காலி மாடுகளில் மோதுண்டு விபத்துகுள்ளாகியுள்ளது.
இன்று (18) அதிகாலை 02 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மாடுகள் நான்கு, ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் அக்கோபுர பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 07 பேர், கந்தளாய் ஆதார வைத்தியசாலையிலும் 04 பேர், கிண்ணியா தள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ், நேற்றிரவு (17) 10 மணிக்கு, கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்துள்ளது.
இதிலிருந்த பயணிகளில் அதிகமானோர் அரச ஊழியர்கள் எனவும், கொழும்பில் பரீட்சை ஒன்றுக்குத் தோற்றி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கோபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 Mar 2026
17 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Mar 2026
17 Mar 2026