2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .