2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஈச்சிலம்பற்று மாணவர்களுக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,பேரின்பராஜா சபேஷ்

திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 30 வறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கும் கல்லடி மாலநீலியம்மன் வித்தியாலயத்தில் 12 மாணவர்களுக்கும் பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 02 மாணவர்களுக்குமாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன

மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய அதிபர் இரா.சச்சிதானந்தம் தலைமையில் இவ்வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன்,வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.லோகராஜா, சங்காரவேல் பவுண்டேசன் இணைப்பாளர் எஸ்.பிறேமானந், கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் உதவி வழங்கும் நிகழ்வு, லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை நிதியத்தின் தொடர்புபடுத்தலுடன் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் கல்வி மேம்பாட்டுச் சபை ஒருங்கமைப்பு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .