2025 மே 19, திங்கட்கிழமை

உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என வேறுபடுத்துமாறு கோரிக்கை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேசத்தில் அன்றாடம் சேரும் கழிவுகளை உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என இருவேறாகப் பிரித்து வைக்குமாறு,  கிண்ணியா நகர சபையினால், பள்ளிவாசல்களிலுள்ள ஒலி பெருகிகள் மூலம் பொது மக்களுக்கு, செவ்வாய்க்கிழமை (02) அறிவிக்கப்பட்டது.

கிண்ணியா நகர சபையினால் பைசல் நகர் சின்னத் தோட்டத்தில் பசளை தயாரிக்கும் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்தச் செயற்றிட்டத்துக்கு பிரதேச மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் இன்றியமையாததாகக் காணப்படுதாகவும் கிண்ணியா நகர சபையினர் அறிவித்துள்ளனர்.

இப்பிரதேசங்களில் வாரத்தில் ஒரு நாள் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களை வேறுபடுத்தி வைக்குமாறும் கிண்ணியா நகர சபை நிர்வாக உத்தியோகத்தர் இதன்போது, கேட்டுக் கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X