2026 மார்ச் 23, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் நால்வர் வைத்தியசாலையில்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

தோப்பூர்-அல்லைநகர் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை(02) இரவு உணவு ஒவ்வாமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கணவன், மனைவி, மகள் மற்றும் மருகன் ஆகியோர் இரவு சோறு உட்கொண்டதையடுத்து நால்வருக்கும் தலைசுற்று,வாந்தி,வயிற்றோட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து உறவினர்களின் உதவியுடன் குறித்த நால்வரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவு ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .