2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

உதவி பிரதேச செயலாளரை அச்சுறுத்தியவர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் உதவி பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்தியதாக கூறப்படும் நபரொருவரை நேற்று திங்கட்கிழமை (26) மாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை( 23) கடமை நேரத்தில் தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்து  உதவி பிரதேச செயலாளரான திருமதி.அபேரத்னவினால்  திருகோணமலை தலைமையக பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டையடுத்து அச்சுறுத்தியதாக கூறப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த 47 வயது நிரம்பிய நபரொருவரை தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .