Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, உப்பூறல் கரையோரப் பகுதியிலுள்ள காணிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட, சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் தலைமையில், சேருவில பிரதேச சபை மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் துறைமுகங்கள், கப்பற்றுறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து, நாட்டின் அந்நியச் செலவாணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான ஏற்றுமதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, உப்பூறல் கரையோரப் பகுதியிலுள்ள காணிகளில் உப்பு உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் சேருவில, ஈச்சிலம்பற்று, மூதூர் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான யுவதிகள் இதனால் நன்மையடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago