Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார கோளாறு காரணமாக, திருகோணமலை உதயபுரி கிராம பொதுமக்களின் வீடுகளிலுள்ள மின்சார உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.
இதற்காகத் தமக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென, அக்கிராம மக்கள், மின்சார சபையின் பிரதம பொறியியலாளருக்கு எழுத்து மூலமாக கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
தாம் பாவித்து வந்த மின்சார உபகரணங்களான தொலைக்காட்சிகள், அலைபேசிகள், மின்விசிறிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இலத்திரனியல் சமையலறை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், கடந்த 13ஆம் திகதி காலை முதல் மின்சார கோளாறு காரணமாக இவ்வாறு பழுதடைந்துள்ளனவென, அம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 30க்கும் அதிகமான வீடுகளில் இப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவெனவும், எனவே, இதனை ஆராய்ந்து தமக்கான நட்டஈடு வழங்குமாறும் தமது கோரிக்கைக் கடிதத்தில் அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களும் கையொப்பமிட்டு, மேற்படிக் கடிதத்தை, பிரதம பொறியியலாளருக்கு வழங்கியுள்ளன.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago