2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘உரிமைகளைக் கேட்டு நிற்கின்ற இனத்தை ஒடுக்க முயற்சி’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தன்னுரிமைகளைக் கேட்டு நிற்கின்ற இனமொன்றை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் ஈடுபட்டு வருகின்றனர் என, தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம்  நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (12) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உரிமைக்காகப் போராடும் இனத்துக்கு அரைக்குறைத் தீர்வொன்ற அ​ரசமைப்பு என்ற அடிப்படையில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டிமுறையற்ற, பௌத்தத்துக்கு முன்னுரிமையளிக்கின்ற விடயங்களை உள்ளடக்கிய தீர்வை அல்லது அவர்களது பரிபாஷையில் கூறுவதானால் அரசமைப்பைத் தர முயல்கின்றார்கள்.

“ஆட்சிக்கு வர முன்னர் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, நாம் ஆட்சிக்கு வந்தால், தமிழர்கள் உரிய கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழும் தீர்வை இலங்கைத் தீவில் கொண்டு வருவோம் என்கின்றனர்.

“பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் இலகுவாக அதனை மறந்துவிட்டு இனவாதம் பேசுவதும் வரலாற்று வழி வந்த நடைமுறையாகி விட்டது.

“இனியும் தமிழ் மக்கள் இவர்களை நம்பி  எதிர்காலத்தில் ஏமாறத் தயாரில்லை.

“இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையில், காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் இருந்த போதும் அதனை கூட நடைமுறைப்படுத்தாத, பேரினவாத அரசாங்கங்கள், தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைகளை வழங்குமென எதிர்பார்ப்பதற்கு இடமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X