Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம், நேற்று (27) மாலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119க்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, நிலாவெளிப் பொலிஸாரால் மீட்கப்பட்ட மேற்படி சடலம் தொடர்பில், திருகோணமலை நீதமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருகோணமலை நீதமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க, சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சடலம் யாருடையது என இனங்கண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.
இதேவேளை, இச்சடலம், செல்வநாயகபுரம் முத்தையா திருஞானம் (60 வயது) என்பவருடையது என, அவரது குடும்பத்தினர், பொலிஸாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ள சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இம்மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago