2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உலர் உணவுகள் விநியோகம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்திலுள்ள விகாரைகளுக்கு இலங்கை - சீனா பௌத்த நட்புறவுச் சங்கம் நன்கொடை அளித்த உலர் உணவுப் பொருட்களை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் இன்று (23) காலை வழங்கிவைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் துசிதா பி.வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இலங்கை - சீனா பௌத்த நட்புறவுச் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விகாரைக்கும் உலர் உணவுப் பொருட்களை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X