ஒலுமுதீன் கியாஸ் / 2018 நவம்பர் 01 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 4ஆம் வாய்க்கால் பிரதேசத்தில், சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு, நான்கு வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
முள்ளிப்பொத்தானை 8ஆம் கொலனியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சிறுவனின் தந்தையின் வயலில் நேற்று (31) விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனைப் பார்க்க ஆசைப்பட்ட சிறுவன், தனது தந்தையோடு, வயலுக்குச் சென்றிருந்த போது, உழவு இயந்திரத்தில் ஏற முயற்சித்த போது, கை தவறி கீழே விழுந்து, உழவு இயந்திரத்துக்குள் சிக்குண்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .