Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எப். முபாரக் / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சரித்திரம் படைக்குமென, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும், திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான, முன்னாள் எம்.பி ஜயந்த விஜேசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அலுவலகமொன்று, கந்தளாய் நகரில் நேற்று (10) திறந்து வைக்கப்பட்ட போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தெரிவித்த அவர் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் ஆகிய வளர்ச்சியடைந்து வரும் நிலையில், கட்சிகளுக்கான மும்முனைப் போட்டிகளும் விசாலமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் இல்லாமல் செய்யப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலையை கூடிய விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள், தமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் எத்தனையே இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாய் செலவில், வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன எனவும் இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் எனவும் முடியாத பட்சத்தில், ஜனாதிபதியின் கவனத்துக்குத் தான் கொண்டு செல்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யாரென்பதை, ஜனாதிபதியே தீர்மானிப்பர் என்றும் இதனை நாட்டிலுள்ள வேறு கட்சிகளின் முக்கியஸ்தகர்கள் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற தேர்தலில் மாற்றுக் கட்சிகளின் தேவைகள் ஏற்பட்டால், பொதுஜன பெரமுனையுடன் கூட்டுச் சேர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago