Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை குச்சவெளி எரிபொருள் நிலையத்தில் கடமையில் இருந்த இராணுவத்தினர் நபரொருவரை தாக்கிய சம்பவமொன்று நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி- காசிம் நகர் மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த முகம்மட் றவ்பீ (42) வயதுடையவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோல் எரிபொருள் நிலையத்தில் நிரப்பி விட்டு சக நண்பரிடம் திறப்பை வாங்குவதற்காக மீண்டும் எரிபொருள் நிலையத்திற்குச் சென்றபோது தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார்.
அங்கு கடமையிலிருந்த பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிந்திருந்தும், தாக்குதல் நடாத்தியதை தெரியாததை போன்று இருந்ததாகவும் அவர் கூறினார்.
தான் இரண்டாவது தடவையாக பெற்றோல் நிரப்புவதற்கு சென்றிருந்தாலும் கூட என்னை பொலிஸ் நிலையத்தில் என் தவறை சுட்டிக்காட்டி ஒப்படைத்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தன்னை தாக்கியதுடன் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கிழித்து இராணுவத்தினரின் அணிந்திருந்த சப்பாத்தினால் உதைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற கூடாது எனவும் ஊடகங்கள் இவ்வாறான செயற்பாட்டை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
21 minute ago
23 minute ago