2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஐந்து விபத்துகளில் 19 பேர் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (07) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான நேரத்தில், வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள 5 விபத்துகளால் 19 பேர் படுகாயமடைந்த

நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துகள், மிஹிந்தபுரம், ஆனந்தபுரி, மொறவெவ, குச்சவெளி, மூதூர் பொலிஸ் பிரிவுகளிலேயே இடம்பெற்றுள்ளனவென, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிந்தபுரப் பகுதியில், இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வித்துக்குள்ளானதில், 38 வயதுடைய தாயொருவரும் அவரது 5 வயது மகளும் படுகாயமடைந்ததுடன், ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த டி.எச். வசந்தா நில்மினி (49 வயது) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.

அத்துடன், ஆனந்தபுரிப் பகுதியில், மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 30 வயதுடைய பவானந்தராசா லக்ஸாயினி படுகாயமடைந்துள்ளார் என்பதுடன், 48 வயது தந்தையும் 12 வயது மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், மொரவெவ பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மாட்டுடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவில், வேக கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோவொன்று வீதியை விட்டு விலகியதில், ஐவர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி விபத்துகளில் படுகாயமடைந்த அனைவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிளுடன் ஓட்டோவென்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயங்களுக்குள்ளான நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மே்றபடி விபத்துகள் தொடர்பாக விசாரணைகளை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X