2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஐம்பது வருடங்களுக்குப் பின் கும்பாபிஷேகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

யுத்தத்தின் போது அழிவடைந்த திருகோணமலை,  தென்னமரவடி அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம், ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் ஓகஸ்ட் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 27ஆம் திகதி காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரை சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.

திருகோணமலை,  உவர்மலை கண்ணகி அம்மன் கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ சுந்தரசாந்தமூர்த்தி குருக்கள், கும்பாபிஷேக கிரியைகளை நடத்துவார். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .