Suganthini Ratnam / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன், இளைஞர்களை ஒன்றுதிரட்டி இம்மாவட்டத்தில்; ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கத்தை நிலை நாட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கந்தளாய் நகரில் புதன்கிழமை (04) மாலை நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும். இந்தத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர்களை களம் இறக்கி சந்தர்ப்பம் வழங்கவுள்ளேன்' என்றார்.
'இம்மாவட்டதிலுள்ள அனைத்துப் பிரதேச சபைகளையும் கைப்பற்றுவதற்கான திட்டங்களையும் மேற்கொள்ளவுள்ளோம். படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமங்களில் அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago