2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஒருவரின் உயிரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் விபத்தொன்றை ஏற்படுத்தி விட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த நபரை, இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், இன்று (25) உத்தரவிட்டார்.

பாட்டாளிபுரம், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், கடந்த 17ஆம் திகதி, தோப்பூர் பகுதியில் ஓட்டோவில் சென்று ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, மோதுண்ட நபர் விழுந்து உயிருக்குப் போராடிய வேளையில், காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இது தொடர்பில், சந்தேகநபருக்கெதிராகப் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, மூதூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X