Princiya Dixci / 2021 மார்ச் 24 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, மூதூர் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார், நேற்று (23) இரவு முற்றுகையிட்டபோது, அங்கிருப்பு கசிப்பு, கோடா போன்றவற்றுடன் பெண்ணொருவரை கைது செய்துள்ளார்.
மேற்படி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்குவதாக மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீ.பி. ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைவாக, அங்குள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 1 இலட்சத்து 35 ஆயிரம் மில்லி லீற்றர், 1,500 மில்லி லீற்றர் கசிப்பு போன்றன கைப்பற்றப்பட்டது. அத்துடன், 55 வயதுப் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025