2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு, 50  லீற்றர் வடிசாராயம்,  360 லீற்றர் கோடா மற்றும் வடிசாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் தோணியொன்றும் கைப்பற்றப்பட்டதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் முற்றுகை நடவடிக்கையின் போது 22 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம்  குறித்த காட்டுப்பகுதியை சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 8 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X