2025 மே 21, புதன்கிழமை

கசிப்புக் காய்ச்சிய, சாராய விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

வெசாக் தினத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்புக் காய்ச்சிய மற்றும் வடித்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரிலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலும் ஐந்து பேரை திருகோணமலை மாவட்டத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் கசிப்பு வடித்துக்கொண்டிருந்த ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதுடன், கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த  நான்கு பேரை சனிக்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க, சாராயம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய ஒருவரை 12 போத்தல் சாராயத்துடன் மஹாமாயபுர பகுதியில் சனிக்கிழமை (21) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவரை எதிர்வரும் 24ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்குமாறு  உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .