2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கசிப்பு காய்ச்சி விற்பனை செய்த இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்து வந்த 21 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களை நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு கைதுசெய்துள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், கசிப்புக் காய்ச்சிய இடத்தை சோதனைக்குட்படுத்திய போது, 15,750 மில்லி லீற்றர் கசிப்புக் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .