Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிக் கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் கணவன், மனைவி ஆகிய இருவரையும் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 51 லீற்றர் கசிப்பு, கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திப்; பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதை அறிந்த சந்தேக நபர்கள் ஏற்கெனவே காய்ச்சப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 30 லீற்றர் கசிப்பை வீட்டு மலசலகூடத்தினுள் ஊற்றியுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட 51 லீற்றர் கசிப்பு கொள்கலன்களில் நிரப்பப்பட்டு நிலக்கீழ் குழிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
கசிப்பு விற்கும் தொழிலை இவர்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, இவர்களை பலமுறை எச்சரித்தாகவும் ஆனால், அவர்கள் தொடர்ந்து சமூகச் சீர்கேடான நடவடிக்கையல்; ஈடுபட்டு வந்ததால் பொலிஸாரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
Divisional secretary Veruga Sunday, 11 October 2015 10:08 AM
இம் முற்றுகை முழுமையாக பிரதேச செயலாளர், மற்றும் ஊழியர்களினால் நடத்தப்பட்டது. சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பொலிசாரிடம் இவர்கள் எம்மால் ஒப்படைக்க பட்டனர்.
Reply : 0 0
Divisional secretary Veruga Sunday, 11 October 2015 10:08 AM
இம் முற்றுகை முழுமையாக பிரதேச செயலாளர், மற்றும் ஊழியர்களினால் நடத்தப்பட்டது. சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பொலிசாரிடம் இவர்கள் எம்மால் ஒப்படைக்க பட்டனர்.
Reply : 0 0
Thayaparan Sunday, 11 October 2015 10:15 AM
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது தவறு. இவர்களை பிரதேச செயலாளர் தலைமையில் ஊழியர் மற்றும் பொது மக்களினாலேயே பிடிக்க பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026