2025 மே 01, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த நால்வர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள  பகுதியில்  கேரளா கஞ்சா வைத்திருந்த  நால்வரை இன்று (13) அதிகாலை 12 மணியளவில், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - லிங்க நகர் பகுதியில் வைத்து கேரளா  கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 1, 500  கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருகோணமலை - மட்கோ பிரதேசத்தில் வைத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 1,400  கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருகோணமலை 03ஆம் கட்டை பகுதியில்  வான் ஒன்றில் கேரளா கஞ்சா கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வாகன சாரதியிடமிருந்து 1,365 கிராமும், மற்றுமொருவரிடம் 1,350 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் நால்வரும், மன்னார் சிலபாத்துறை, உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27, 28, 24,24 வயதுடையவர்கள் என பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .