2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர், பாலநகர்ப் பிரதேசத்திலுள்ள வீதியால் கஞ்சா கொண்டுசென்ற குற்றச்சாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட ஒருவரை இன்று புதன்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்த சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .