Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
1 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, டிசெம்பர் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார்.
தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஆனமடுவ மஹவுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஏ.ரணதுங்க (33 வயது) என்பவரே, இவ்வாறு தடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டவராவார்.
பொலிஸ் நிலையத்திலுள்ள அவரது அறைக்குள் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள், 1 கிலோ 100 கிராம் கஞ்சவை மறைத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவரது பெட்டியைச் சோதனையிட்ட போது கஞ்சா மீட்கப்பட்டது.
அது தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்தே, இம்மாதம் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago