2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்    

திருகோணமலை மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவை குறித்து தெரியவருவதாவது, 

900 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், ஞாயிற்றுகிழமை (06) உத்தரவிட்டார். 

குச்சவெளி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கைது செய்யப்பட்ட இந்நபரை, ஞாயிற்றுகிழமை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிபதி அனுமதியளித்தார். 

எனினும், பிணை எடுக்க எவரும் முன்வராததால் எதிர்வரும் 11ஆம் திகதி வரை, அவருக்கான விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 49 வயதுடைய ஒருவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (06) உத்தரவிட்டார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பகுதியில் இந்நபர் கஞ்சா வைத்திருப்பதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்நபர், கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

இச்சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .