Kogilavani / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான 35 வயது நபரை, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதவான் நீதிமன்ற நீதவான் கயான் மீ ஹககே, வியாழக்கிழமை(19) உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்படி நபர், கடந்த 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் நீதவானின் உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவரை நேற்று(19) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தயபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, புல்மோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகேசன்புர பகுதியில் குறித்த நபர், நீண்ட காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் சந்தேக நபருக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் இரண்ட வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago