2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியாகம பகுதியில் தம் வசம் ஒரு கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை(12) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.     

குறித்த நபர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.    

சந்தேக நபர் இதற்கு முன்னரும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.                          

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .