2025 மே 21, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞனுக்குத் தண்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெண்ராசன்புர பிரதேசத்தில் 2 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் என்.ஜீ.கபில, 2,500 ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.

23 வயதுடைய குறித்த இளைஞன், கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகளினால், ஞாயிற்றுக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்விளைஞன், கஞ்சா வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம், அவரைச் சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இளைஞனை, பொலிஸார், கந்தளாய் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (06) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X