எப். முபாரக் / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பகுதியில் கடற்கொள்ளையில் ஈடுபட்டு, 35 ஆயிரம் கிலோகிராம் கணவாய்களைத் திருடிய 37 வயதுடைய நபரொருவரை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான், இன்று (14) உத்தரவிட்டார்.
சந்தேகநபருடன் இணைந்த குழுவொன்று, ஆழ் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களிடம் போலித் துப்பாக்கி, வாள், இரும்பு, பொல்லுகளைக் காட்டி மீனவர்களிடம் மீன், இதரப் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாரே, 35 ஆயிரம் கிலோகிராம் கணவாய்களைக் கொள்ளையிட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்த சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
34 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
1 hours ago